கானல் நீரா போனதடா … ஊரெல்லாம் பரபரப்பு ஊரடங்கு ஒலிபரப்பு கண்ணாத்தா காது கம்மல் வழி பயணத்துக்குத் தோதாச்சு . ராணுவ வண்டி போல பேருந்துகள் அடைபட்ட கைதிகளாய் பயணிகள். மூச்சுவிட இடமில்லாமல் மனித முகம் வறுமை உடம்புகள் .. மடியில் ஒரு குழந்தை சின்னாச்சி. கண்ணாத்தா வயிற்றில் ஒரு குழந்தை. அச்சமும் பீதியும் கண்களை விட்டு அகலாமல் உறக்கம் விழித்துக் காவல் காத்தது. ஒரு பொம்மையாய் சின்னாச்சி மடியிலே . மலங்க மலங்க விழித்தபடி. விடிஞ்சு போச்சுன்னா வீடுபோய் சேந்துடலாம். சொந்த பந்தம் சூழ கொஞ்சம் வாயாற உண்ணலாம். கண்ணசந்த நேரம் பார்த்துக் காட்டுக் கூச்சல் லத்தி சத்தம். இறங்கச் சொல்லி லத்திகள் கூவின. பாஷைகள் புரியவில்லை. தேச பார்டர் என்றது அரசு ஆர்டர் என்றது. பாதியில் முடிந்தது பயணம். நாடோடிகளாய் நாதியற்றவர்களாய் நடை பயணம் தொடர்ந்தது. தொண்டைக் குழி வற்றியது. உச்சி வெயில் பொசுக்கியது. காற்று மட்டும் இலவசமாய்.. குற்றுயிரும் குலையுயிருமாய் வயிற்றுப் புள்ளக்காரி சத...
Posts
வியர்வையின் வாசம்
- Get link
- X
- Other Apps
வியர்வையின் வாசம் பழுப்பேறிப்போன அம்மாவின் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்து கிடந்தன. நாட்களை எண்ணியபடி நாடித்துடிப்பு! அண்னாந்து பார்த்த அம்மாவின் கண்களில் விட்டத்தில் ஓடும் கடந்தகால நினைவுகள். ஆசையாய் ஊட்டிய பால் பணியாரம் வாய்க்கதுப்பின் வழி வழிந்தோட , அதைத் துடைக்க நேரிடுகையில் பருவக்கால நினைவுகள் மெல்ல அரும்புகின்றன.... விபரம் தெரிந்த நாள் வரை விடாப்பிடியாய்க் குடித்து முடித்த தாய்ப்பால் கன்னக் கதுப்பில் சிந்தும் போதெல்லாம் நெடிய வியர்வையின் நாற்றம் வீசும் முந்தானையில் துடைத்தபடி பாசமாய் பார்க்கும் அம்மாவின் பார்வையில் கனவுகள் பூக்கும். புல்லறுக்கச் செல்லும்போது அம்மா கைப்பிடித்துச் செல்கையில் வீசிடும் பூமழையில் அவள் முந்தானை குடையாக.... மழைத்துளியில் சொட்டுச் சொட்டாய் வியர்வை வாசம் கரைந்து போகும். நடுங்கும் குளிர்வாடையில் நள்ளிரவு நேரத்தில் கிழிந்து கிடக்கும் முந்தானை கதகதக்கும் போர்வையாகும். வாய்க்கால் வரப்புகளைத் தம் காலால் துவைத்துப் போட்டவள் பஞ்சு மெத்தையில் சுருண்டு கிடக்கிறாள்.. இப்போது , ...
சிலுவை சுமந்தவள்
- Get link
- X
- Other Apps
சிலுவை சுமந்தவள் அலங்கரித்துக் கிடக்கிறது கல்லூரி மேடை ஆம்! கலைவிழாத் தொடங்கிற்று. பயின்ற கல்லூரிக்குள் பலகாலம் சென்றாலும் நீயும் நானும் சந்தித்துக்கொண்ட அந்தக் கலைவிழாப்போட்டிகள் வாழ்வின் கல்வெட்டுக்கள். இன்றோ .. நான்கு பேர் அழைத்துச்செல்ல நடுவராக நான்.. பார்வை மேடையில் பதிய நினைவலைகள் நீண்ட துரம் பின்னோக்கி ஓடுகின்றன.. சக தோழனாக உன்னோடு பயணித்த காலங்கள் வாழ்வின் வசந்தங்கள்.. புத்தாண்டு பிறந்து விட்டால் உனக்குள் பிறக்கும் கலையுணர்ச்சி…. போட்டிகளின் போது மட்டும் நீயும் நானும் எதிரும் புதிருமாய்.. நீ கலைமகளின் வரம் வாங்கிப் பிறந்தவளா என்ன ? எல்லாம் உனக்கு அத்துப்படி….. உன் பெயரை மேடையில் உச்சரிக்கும்போதெல்லாம் ஆர்ப்பரிக்கும் கரவொலி அடங்க நேரமாகும்.. பாடலின் பல்லவியில் பரிசினை உறுதி செய்வாய்.. தாளமிடும் பாவனையில் உணர்ச்சிகளை உலவ விட்டு உயிர்களை வதமிடுவாய் .. ஆட்டப்போட்டிகளில் அதிசயம் நிகழ்த்துவாய். புள்ளிமான் குட்டியெனத் துள்ளியே நீ குதிப்பாய் .. கடைசி நிமிடங்கள...
புஷ்பமாலா 2016 கலைவிழாவின் சிறப்பு விருந்தினர் இயக்குநர் ஈட்டி ரவிஅரசு,களவாணி இணை இயக்குநர்,நடிகர் திரு திருமுருகன்
- Get link
- X
- Other Apps
புஷ்பமாலா 2016 கலைவிழாவின் சிறப்பு விருந்தினர் நடிகர் திரு ஆடுகளம் நரேன்
- Get link
- X
- Other Apps
புஷ்பமாலா 2016 கலைவிழாவின் சிறப்பு விருந்தினர் இயக்குநர் ஈட்டி ரவிஅரசு
- Get link
- X
- Other Apps