Posts

Showing posts from 2020
கானல் நீரா போனதடா   … ஊரெல்லாம் பரபரப்பு ஊரடங்கு ஒலிபரப்பு கண்ணாத்தா காது கம்மல் வழி பயணத்துக்குத் தோதாச்சு . ராணுவ வண்டி போல பேருந்துகள் அடைபட்ட கைதிகளாய் பயணிகள். மூச்சுவிட இடமில்லாமல் மனித முகம் வறுமை உடம்புகள் .. மடியில் ஒரு குழந்தை சின்னாச்சி. கண்ணாத்தா வயிற்றில் ஒரு குழந்தை. அச்சமும் பீதியும் கண்களை விட்டு அகலாமல் உறக்கம் விழித்துக் காவல் காத்தது. ஒரு பொம்மையாய் சின்னாச்சி மடியிலே . மலங்க மலங்க விழித்தபடி. விடிஞ்சு போச்சுன்னா வீடுபோய் சேந்துடலாம். சொந்த பந்தம் சூழ கொஞ்சம் வாயாற உண்ணலாம். கண்ணசந்த நேரம் பார்த்துக் காட்டுக் கூச்சல் லத்தி சத்தம். இறங்கச் சொல்லி லத்திகள் கூவின. பாஷைகள் புரியவில்லை. தேச பார்டர் என்றது அரசு ஆர்டர் என்றது. பாதியில் முடிந்தது பயணம். நாடோடிகளாய் நாதியற்றவர்களாய் நடை பயணம் தொடர்ந்தது. தொண்டைக் குழி வற்றியது. உச்சி வெயில் பொசுக்கியது. காற்று மட்டும் இலவசமாய்.. குற்றுயிரும் குலையுயிருமாய் வயிற்றுப் புள்ளக்காரி சத...