அன்னக்கிளி அன்னக்கிளி ! எழுபத்தைந்துகளில் கிராமத்து வீதிகளை எழுச்சி பெறச் செய்த தேசிய கீதம். வாலிபப் பெண்களின் விடியலின் கானம். பச்சைக்கிளிகளின் பசிய வண்ணம் கண்ணுக்கு இதம் இனிய கானம் நெஞ்சுக்கு வரம். ஒரு புதியவரின் இசையின் இளையவரின் இசைக்கோலம் தாவியோடும் ஆற்று நீர்களிலும் நெல் குவிந்த களத்து மேடுகளிலும் வயற்சேறுகளிலும் பூத்துக் குலுங்கும் நெற்கதிர்களிலும் பதியம் போடப்பட்டது அப்பொழுதுதான். காற்று அடிக்கும் திசையெல்லாம் அன்னக்கிளி பாட்டாகச் சென்று சேர்ந்தாள். அன்னக்கிளி உன்னைத் தேடுதே நாற்று நடும் பெண்களின் ஜீவ ஊற்றானது. திரைக்கொட்டகைகளில் கண்ணிமைக்காமல் திரும்ப,திரும்ப பார்த்து,கேட்டு,பாடி நெஞ்சுக்குள் பதியம் போட்ட காலம் இன்று நினைவுக்குள் வருகிறது. கிராமத்து வாத்தியார்கள் பெட்ஷீட்,தலையணை சூட்கேஸ்களுடன் பயணமாயினர் தழைய தழைய வேட்டியோடும் வெளுத்த சட்டையோடும். சொந்த பந்தமில்லாதவர்கள் அன்னக்கிளிக்குத் தங்கையானார்கள் சரிந்த கொண்டையோடு. ஜவுளிக்கடைகள் புளியம்பூச்சேல...
Posts
Showing posts from March 16, 2014