Posts

Showing posts from June 1, 2014

மாடுகள்

மாடுகள் உயிர்களின் பிறப்பில் மாடுகள் மகத்தானவை. மக்களைக் காக்கும் பணியில் காலங்காலமாய்! உடனிருந்து உதவும் பணியில் இன்றும் என்றுமாய்! எருதுகளாய்ச் சென்று வயலைச் செப்பனிடும். பசுக்களாய்ப் பிறந்து வயிற்றுக்குப் பாலை வார்க்கும். எருமைகளாய்ப் பிறந்து ஏழைகள் வறுமை போக்கும். பாசத்தைப் பொழியும் கொஞ்சம் பக்குவமாய்ப் பழகிவிட்டால். மாடுகளிலும் சாதிகள் . மனிதனால் தான். உயர் ரகங்களுகளுக்குக் கொஞ்சம் கூடுதல் கவனிப்பு. உணவு முதல் உறைவிடம் வரை. என்றும் நாட்டு மாடுகளே நம்மோடிருக்கும், அன்போடிருக்கும். கோபம் வந்தால் மனிதரைப்போல கொஞ்சம் முட்டிப் பார்க்கும். நாட்டுக் காளைகள் தொழிலுக்கேற்பப் பக்குவப் படுத்தப்படும். வண்டிமாடு,உழவுமாடு ஏறக்குறைய ஒரே இனம்தான். செக்கு மாடுதான் இதில் தனிரகம். ஆரம்பத்தில் முரண்டுபிடிக்கும். நுகத்தடியைச் சுமந்து சுற்றிச் சுற்றி வரக் காலப் போக்கில் சுகமாய்த் தெரியும் செக்குகளோடு பழகிவிட்ட பாதங்களுக்கு. இவை, சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைகள். த...