Posts

Showing posts from December 1, 2013

பாட மறக்கும் பாட்டு

Image
பாட மறக்கும் பாட்டு……… அதிவிடியலில் ஒரு செய்தி துக்கத்தோடு! நண்பர் என்ற உரிமையில். நண்பர் அம்மாவின் மீது கொண்ட அன்பு அளவிடற்கரியது. ஆழ்கடல் அளவு. அந்த நேரமே அப்பாவின் நினைவுகள் அலையாய் மோதின. மாலையோடு சென்ற என்னை அழுது தழுவினார் நண்பர். ஆறுதல் கூறினேன் கண்ணீரால். கால் வலியெடுக்க ஆசனம் தேடி அமர்ந்து கண்களைச் சற்றே மூடி இரு கைகளால் துடைத்தபோது “ எம்மாடியோவ்”என்று பெருங்குரலெடுத்து அழுகுரல் வந்த திசை நோக்கிக் கண் திறந்தேன். மூன்று தலமுறைக்கு முந்தைய கிழவி ஒருவர் தரையைப் பிளப்பது போல் நெஞ்சிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழுதார். வகை வகையாய் கதையெடுத்துக் கடந்த காலம் சொல்லி அழுதார். நினைவுகள் சற்றே பின்னோக்க அருக்காணி அக்கா கண்களில் வந்து போனாள். பேருந்து நுழையாத குக்கிராமம். தென்னை ஓலை வேய்ந்த வரிசை வீடுகள். இரவு நேரத்தில் அமைதியைக் கிழிக்கும் அருக்காணி அக்காவின் அழகிய குரல். குழந்தையைத் தூங்க வைக்கத் தொன்று தொட்டுப் பாடி வரும் தாலாட்டு. தால் + ஆட்டு =தாலாட்டு ...