Posts

Showing posts with the label கவிதைகள்

வியர்வையின் வாசம்

வியர்வையின் வாசம்  பழுப்பேறிப்போன   அம்மாவின் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்து கிடந்தன. நாட்களை எண்ணியபடி நாடித்துடிப்பு! அண்னாந்து பார்த்த அம்மாவின் கண்களில் விட்டத்தில் ஓடும் கடந்தகால நினைவுகள். ஆசையாய் ஊட்டிய பால் பணியாரம் வாய்க்கதுப்பின் வழி வழிந்தோட , அதைத் துடைக்க நேரிடுகையில் பருவக்கால நினைவுகள் மெல்ல அரும்புகின்றன.... விபரம் தெரிந்த நாள் வரை விடாப்பிடியாய்க் குடித்து முடித்த தாய்ப்பால் கன்னக் கதுப்பில் சிந்தும் போதெல்லாம் நெடிய வியர்வையின் நாற்றம் வீசும் முந்தானையில் துடைத்தபடி பாசமாய் பார்க்கும் அம்மாவின் பார்வையில் கனவுகள் பூக்கும். புல்லறுக்கச் செல்லும்போது அம்மா கைப்பிடித்துச் செல்கையில் வீசிடும் பூமழையில் அவள் முந்தானை குடையாக.... மழைத்துளியில் சொட்டுச் சொட்டாய் வியர்வை வாசம் கரைந்து போகும். நடுங்கும் குளிர்வாடையில் நள்ளிரவு நேரத்தில் கிழிந்து கிடக்கும் முந்தானை கதகதக்கும் போர்வையாகும். வாய்க்கால் வரப்புகளைத் தம் காலால் துவைத்துப் போட்டவள் பஞ்சு மெத்தையில் சுருண்டு கிடக்கிறாள்.. இப்போது , ...

சிலுவை சுமந்தவள்

சிலுவை  சுமந்தவள் அலங்கரித்துக் கிடக்கிறது கல்லூரி மேடை ஆம்! கலைவிழாத் தொடங்கிற்று. பயின்ற கல்லூரிக்குள் பலகாலம் சென்றாலும் நீயும் நானும் சந்தித்துக்கொண்ட அந்தக் கலைவிழாப்போட்டிகள் வாழ்வின் கல்வெட்டுக்கள். இன்றோ .. நான்கு பேர் அழைத்துச்செல்ல நடுவராக நான்.. பார்வை மேடையில் பதிய நினைவலைகள் நீண்ட துரம் பின்னோக்கி ஓடுகின்றன.. சக தோழனாக உன்னோடு பயணித்த காலங்கள் வாழ்வின் வசந்தங்கள்.. புத்தாண்டு பிறந்து விட்டால் உனக்குள் பிறக்கும் கலையுணர்ச்சி…. போட்டிகளின் போது மட்டும் நீயும் நானும் எதிரும் புதிருமாய்.. நீ கலைமகளின் வரம் வாங்கிப் பிறந்தவளா என்ன ? எல்லாம் உனக்கு அத்துப்படி….. உன் பெயரை மேடையில் உச்சரிக்கும்போதெல்லாம் ஆர்ப்பரிக்கும் கரவொலி அடங்க நேரமாகும்.. பாடலின் பல்லவியில் பரிசினை உறுதி செய்வாய்.. தாளமிடும் பாவனையில் உணர்ச்சிகளை உலவ விட்டு உயிர்களை வதமிடுவாய் .. ஆட்டப்போட்டிகளில் அதிசயம் நிகழ்த்துவாய். புள்ளிமான் குட்டியெனத் துள்ளியே நீ குதிப்பாய் .. கடைசி நிமிடங்கள...

தீப ஒளித் திருநாள்……….

·         வருடந்தோறும் வருகின்ற வானவேடிக்கை . வசதியானவர்களால் வாழ்த்துப்பா பாடப்படுகின்றது . வறியவர்களால் வயிறெரியப்படுகின்றது . ·         அழகு ஆடைகள் அசல் விலையை மறைக்க , குடிசை வீட்டுக்காரி கண்ணாடிக் கடைகளை வெறித்துப் பார்த்துப் பாதையோரமே நமக்குப் பழக்கப்படுவதாக விதியை எண்ணி , குழந்தைகளை விலைமதிப்பில்லா பளபளக்கும் சரிகையாடையால் மகிழ்ச்சிப்படுத்துவாள் . ·         ஆண்டுதோறும் அன்பை அணுவளவேணும் அறிந்திடா அண்ணன் , தம்பிகள் , அக்கா , தங்கைகளுக்கு அவசரகதியில் அனுப்புகின்றனர் தீபாவளிச் சீரை வாடிக்கையாக வங்கிக் கணக்கில் . சேமிப்பு எண்கள் மட்டுமே சகோதரப்பாசத்தால் இதயங்களைத் தழுவுகின்றன . ·         இப்பொழுதெல்லாம் தீபாவளியெனின் பள்ளி மாணவனும் மதுவின் வாசனையைத் தேடுகின்றான் . கல்வி கற்கும் காலங்களில் கனவு . கனவிலேனும் கல்வியை அறிந்தானா ? பதில் சொல்லு...