Posts

Showing posts from May 26, 2013

இளைஞனே வா!

·         அறிவியல் உலகில் மனம் அலைபாயும் மனிதா ? – மடமையில் தோய்ந்தால் அதை விலக்குதல் எளிதா ?. ·         கண்ணுக்கு எதிரே கடலென நூல்கள் மனம் புரட்டிட மறந்தால் தொலைந்திடும் வாழ்நாள். ·         காற்றிலே ஏறினாய். விண்ணையே தாண்டினாய். கடலினுள் மூழ்கியே முத்தையே ஏந்தினாய். ·         அத்தனை ஆற்றலும் மொத்தமாய் உன்னிடம். குத்தகை எடுப்பதா ? மடமைகள் நெஞ்சிடம். ·         பல்லியைக் கண்டு நீ புலி எனப் பதறலாம். தன்னினம் அழிவதைக் காணாதிருக்கலாம். ·         அச்சத்தில் வாழ்பவன் ஆசைக்கு அடிமை. ஆசையே வாழ்வானால் அதுதான் கொடுமை. ·         மடமையே மனிதனுக்கு மாபெரும் நஞ்சு. அதை நீக்கிட அடைந்திடும் நிம்மதியை நெஞ்சு . ·         பயில வா ! பயில வா ! பாடம் பல பயில வா....