கவிதை: தீப வலித் திருநாள்
தீப வலித் திருநாள் ………. வருடந்தோறும் வருகின்ற வானவேடிக்கை . வசதியானவர்களால் வாழ்த்துப்பா பாடப்படுகின்றது . வறியவர்களால் வயிறெரியப்படுகின்றது . · அழகு ஆடைகள் அசல் விலையை மறைக்க , குடிசை வீட்டுக்காரி கண்ணாடிக் கடைகளை வெறித்துப் பார்த்துப் பாதையோரமே நமக்குப் பழக்கப்படுவதாக விதியை எண்ணி , குழந்தைகளை விலைமதிப்பில்லா பளபளக்கும் சரிகையாடையால் மகிழ்ச்சிப்படுத்துவாள் . · ஆண்டுதோறும் அன்பை அணுவளவேணும் அறிந்திடா அண்ணன் , தம்பிகள் , அக்கா , தங்கைகளுக்கு அவசரகதியில் அனுப்புகின்றனர் தீபாவளிச் சீரை வாடிக்கையாக வங்கிக் கணக்கில் . சேமிப்பு எண்கள் மட்டுமே சகோதரப்பாசத்தால் இதயங்களைத் தழுவுகின்றன . · இப்பொழுதெல்லாம் தீபாவளியெனின் பள்ளி மாணவனும் மதுவின் வாசனையைத் தேடுகின்றான் . கல்வி கற்கும் காலங்களில் கனவு . கனவிலேனும் கல்வியை ...