Posts

Showing posts from September 15, 2013

கடவுள் ஒரு.................. கவிதை

Image
                 கடவுள் ஒரு.... ·                  கடவுள் ஒரு வள்ளல் ஆதியிலே இவ்வுலகைப் படைத்தவன் கூடவே மனிதர்களையும் படைத்த பொழுது.. ·         கடவுள் ஓர் அறிஞன் குட்டை, நெட்டையென்று சோடி சேர்த்து சோதனைச் சாவடிகளில் வாழ்க்கையென ஒன்றை உணர்த்திய பொழுது.. ·         கடவுள் ஒரு புரோகிதன் சேரவேண்டியதைப் பிரித்து, சேரக்கூடாததை இணைத்து இதுதான் வாழ்க்கையென்று ஒரே மந்திரத்தை உச்சரித்த பொழுது... ·         கடவுள் ஒரு வேடிக்கையாளன் விரல்களை இழந்தவன் கட்டுக் கட்டாய் சலவைசெய்த பாவ நோட்டுக்களை வரதட்சணையாகப் பெற்ற பொழுது..... ·         கடவுள் ஒரு சூத்திரதாரி அவரவர் அர்த்தப்படுத்திய வாழ்க...