செம்மொழிக் கட்டுரை
பொருட்பாலில் வள்ளுவர் கருத்தும் உரைகளின் பொருத்தப்பாடும் இக்கட்டுரையானது வள்ள்வரின் பொருட்பாலிலுள்ள குறட்பாக்களின் கருத்தையும் பல்வேறு அ றிஞர்களின் ரைகளின் பொருத்தப்பாடுகளையும் விளக்குவனவாக அமைகிறது. மணக்குடவர் பொருட்பாலாவது பொருளின் பகுதி என்று கொள்ளப்படும் பொருள் என்றது மக்களை உடைத்தாகிய நிலம் பகுதியாவது அந்நிலத்தை ஆளுதற்குரிய அரசரது தன்மையும் அவரது ஆளுதற்குச் செய்யும் திற்களும் அதற்குத் துணையான அமாத்தியர் இலக்கணமும், அவர் செய்யும் திறன்களும் அவ்விருவரானும் உண்டாக்கப்பட்ட நாடும் அரணும் பொருளும் படையும் ஆகிய இவற்றினது திறன்களும், அறம் பொருட்கும் பொருள் உடையார்க்கும் கேடுவரும் திறன்களும், அரசியலும், அமைச்சியலும், நட்பியலும் , துன்பவியலும், குடியியலும், என அடங்கும் என்கிறார். இதனுள் இறைமாட்சி முதலாக இடுக்கண் அழியாமை ஈறாகக்கூறிய அதிகாரம் இருபத்தைந்தும் பெரும்பான்மையும் அரசர்க்கு உரியவாதலின் அரசியல் என்றும், அமைச்சு முதலாக அவையஞ்சாமை ஈறாகக் கூறிய அதிகாரம் பத்தும் பெரும்பான்மையும் அமைச்சர்க்கு உரியவாதலின் அமைச்சியல் ...