Posts

Showing posts from December 27, 2015

இணையச் செய்திகள்

Image
முகப்பு |  வலைச்சரம் - ஒரு அறிமுகம் | WEDNESDAY, DECEMBER 11, 2013 வலைச்சரத்தில் மூன்றாம் நாள்: புதன் மலர் ➦➠ by:   சித்ராசுந்தரமூர்த்தி காவேரிக்கரை   என்றொரு வலைப்பூ. " கவிதை , கட்டுரை , கொஞ்சம் தத்துவம் , சில புகைப்படம் இப்படியா ஒரு சின்ன கிறுக்கல்கள்" , இவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த வலைப்பூ ' என்கிறார் புதிதாக வலைப்பூவை ஆரம்பித்து அழகழகான கவிதைகளை முயற்சித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் முனைவர் நா.சிவாஜி கபிலன்.   பாட மறக்கும் பாட்டு   என்ற தலைப்பில் , ஒப்பாரிப் பாடல் காணாமல் போனதால் தமிழனின் அருமருந்தான மனச்சுமையைக் குறைக்க முடியாமல் போய்விட்டதாகப் புலம்புகிறார். உண்மைதான் , ஆராய்ச்சிகளும் அதைத்தானே சொல்கின்றன. இக்கவிதையில் வரும் அருக்காணி அக்கா மனதில் நிலைத்து நிற்கிறார். பெருந்தீ   என்னும் தலைப்பில் இன்னொரு கவிதை. வெளியூரில் இருந்து புகைவண்டியில் வீடு திரும்பும் ஒரு இளைஞனின் கண்ணெதிரில் பசுமை சூழ்ந்த தன் கிராமம் இப்போது எப்படி வெறிச்சோடிக் கிடக்கிறது என்பதுதான் இக் கவிதை. நம்மையும் அவருடன் அவரது கிராமத்திற்கே அழைத்துச்சென்று விடுக...