Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Sunday, June 26, 2011

ரூசோ:கல்விச் சிந்தனைகள்

ரூசோ:கல்விச் சிந்தனைகள்;
கல்வியின் நோக்கம், ஒருவன்,மனிதனையும் அவன் வாழும் சூழ்நிலைகளையும் அறிந்து கொள்வதாகும்.வாழ்க்கையின் இன்ப துன்பங்களை ஒரே மாதிரியாகப் பாவிப்பவர்கள் கல்வியை நன்கு பயின்றவர்களாவர்.நாம் எப்பொழுது வாழத் தொடங்குகின்றோமோ,அப்பொழுதே கல்வி கற்கத் தொடங்குகின்றோம் என்று பொருள்.

Friday, June 24, 2011

அறிவார்ந்த விளக்கம்

அறிவார்ந்த விளக்கம்:( Rationalisation):அறிவார்ந்த விளக்கம் என்பது உளவியலில் ஒன்றாக உள்ளது.எந்த ஒரு செயலிலும் உள்ள நியாயத்தை மிகச் சரியாக , பிறர் ஏற்றுக் கொள்ளும் வகையில் எடுத்து உரைப்பதாகும்.

Thursday, June 23, 2011

உளவியல்

இடப்பெயர்வு(displacement): இது தற்காப்பு இயக்கங்களுள் ஒன்றாகும்.ஒருவர் மீது வருகின்ற வெறுப்பு கோபம், ஆகியனவற்றை யாரிடமும் காட்ட முடியாத சூழல் ஏற்படும் போது,அதை நம்மால் நேரடியாகக் காட்டமுடியாது.அப்போது அந்த வெறுப்பு ,கோபம் வேறு ஒருவர் மீது காட்ட நேருமேயானால் அதற்கு உளவியலில் இடப்பெயர்வு(displacement) என்று  பெயர்.இக்கோட்பாட்டை உருவாக்கியவர் சிக்மண்ட் பிராய்டு ஆவார்.அவரது மகள் அன்னா பிராய்டும் உருவாக்கினாரென்பர்.

Friday, June 17, 2011

காதல்

அம்மம்மா!
கனவு வந்ததே,கவிதை பிறந்ததே,தூக்கம் தொலைந்ததே,
அட இதுதான் இது தான் காதல்,என்பதா?
இது இளமை எழுதும் பருவப் பாடலா?

Thursday, June 16, 2011

வாழ்க்கைத் தத்துவம்

குழம்பு வைக்கும் போது உப்பை மட்டும் அளவாகப் போட வேண்டும். .ஒருவேளை அதிகமாகப் போட்டுவிட்டால் அதை மறைக்க ,தேங்காய் அறைத்து ஊற்றலாம்,வெந்நீர் அதிகம் ஊற்றலாம்.சுவைத்துப் பார்க்கும்போது உப்பு குறைவாகத் தெரியும். ஆனால் குழம்பு எதிர் பார்த்த சுவையைத் தராது.

வாழ்க்கையும் அது போலத்தான்!கவனமமகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.ஒருவேளை கொள்கையில்,வாழ்க்கைத் திட்டங்களில் தோல்வி அடைந்துவிட்டால் அத்தோல்வியை வேறு எதைக் கொண்டு சரி செய்தாலும் மனதுக்கு நிறைவைத் தராது.தேங்காயும் ,வெந்நீரும் அதிகமாக ஊற்றிய குழம்பைப் போல.