·
விதைக்கும்
முன்னே
முளைக்கத்துடிக்கும்
விதைகளுக்கு
வீரியம்
அதிகம்தான்.
ஆனாலும்
சில
முளைத்தும் பயனில்லை.
·
முட்டையிலிருந்து
பறவைகள்
விடுபடுகிறபொழுதே
சில
பறக்க எத்தனித்து
சிறகை
ஒடித்துக்கொள்ளும்
சோகம்
நிகழ்வதைக்
கவனிக்கத்
தவறுகின்றன
ஆர்வ
மிகுதியால்.
·
அரும்புகள்
அழகுதான்,
கொடிகளின்
நுனிகளில்
ஊஞ்சலாடும்வரை.
ஆனாலும்,
தலையில்
சூடிக்கொள்ள
தயங்கும்
மனம்.
பின்
மலர்மாலையாவது
எப்படி?
·
மனம்
ஓடிவருகின்ற
ஆற்றுநீர்
போல
அமைதிகொள்வதில்லை.
அது,
வானத்தில்
வசீகரிக்கும்
வளைந்து
கிடக்கும்
வானவில்லை
வளைக்க
நினைக்கின்றன.
·
மண்ணுடனான
தொப்புள்கொடி
உறவை
தனக்கு
மட்டுமே
சொந்தம்
எனக்கொண்டாடும்
சுயநலங்கள்
மண்ணுக்கு
மேலே
மண்டிக்கிடக்கும்
மரங்களை
மனம்
கொள்வதில்லை.
·
சூரியக்
கிரணங்களைக்
கைகளால்
மறைக்க
திறமை
போதாமல்
அறிவை
வளர்க்க
அவசரப்படும்
உலகமே,
அப்பாவியாக
ஊர்க்கதைப்
பேசிப்பயனில்லையே
!
·
வல்லூறுகளின்
வலிமை
அதை
,வானத்தில்
பறக்க
வைக்கின்றது.
ஊர்க்குருவிகள்
அண்ணாந்து
உயரே
பார்க்காமல்
நரிகளென
ஊளையிட்டு
ஊருறங்குகையில்
உள்ளங்கைகளைக்
கடிந்துகொள்கின்றன
உதவிக்கு
வரவில்லையென்று.
·
அந்தியில்
வெளுத்த
வானம்
ஒருபொழுதும்
வஞ்சித்ததில்லை
மக்கள்
மனசு போல.
அது,
வானம்பாடிகளுக்கு
இறக்கைகளைக்
கொடுத்தது
மேலே
மேலே பறப்பதற்கு.
மனத்தைச்
சுகமாக்கு
மேன்மேலும்
உயர்வதற்கு.
வாழ்க்கை
அழகியது.
அதை
அழுக்காக்காதே!