Blogger Tricks

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Pages

ஞாயிறு, 23 ஜூன், 2013

ctober 2011
ஒவ்வொரு வருசமுந் தீவாளி எல்லோருக்கும் வரும்.ஆனா ஒரு காலத்துல அப்பிடியெல்லாம் ஏழங்களுக்கு இருந்ததில்ல.ஏன்னா அவங்க வருமானம் அப்பிடி.தீவாளி சாயந்திரமே எல்லா புள்ளைங்களும் வெடி வெடிக்க ஆரம்பிச்சுடுவாங்க,ஆனா எங்க பொழப்பு  நடு ராத்திரிக்கு மேல தான் ஆரம்பிக்கும்.கடைக்குப் போன அப்பா எப்ப திரும்பி வருவாருன்னு கண்ணு முழிச்சி கண்ணு முழிச்சி கண்ணே சோந்து போயிடும்.அப்பா ஆவலோட வந்து தூக்கக் கலக்கத்துல இருக்கிற எங்கல எழுப்பி வெடியும் ,சட்டையும் கொடுப்பாரு.அப்ப எங்க மொகத்துல தெரியுற சந்தோசத்தப் பாக்குறதுக்கு எங்க பிரண்ட்ஸ் இருக்க மாட்டாங்க. ஆனாலும் அப்பாவோட மொகத்துல தெரியுமே ஒரு சந்தோசம் அதுக்கு ஈடு இணை எதுவுமில்ல.இந்த தீவாளியிலயும் அப்பா இல்ல.அப்பா இல்லாத தீவாளி ஒரு தீவாளியா? மனசு மௌனமா அழுவுது. வழியில்லாம பிள்ளைங்களுக்காகன்னு  இந்தத் தீவாளியும் ஒரு காரணம் சொல்லியே கொண்டாடப் படுது.
P

 ஒரு மௌன விசும்பல் 

*     வாலிபக் கனவுச்  சந்தையில்
என் வாழ்க்கைக்
களவாடப்பட்டுவிட்டது.

*     என் சுயம்
தீயாய்ப் பற்றி எரிய
சித்தன் பார்த்துச்
சிரிக்கின்றான்.

*     கண்கள் சொறிகின்றன
சிவப்புக் கண்ணீரைக்
கன்னக் குழிகளில்.

*     குப்பை மேடுகளிலோ
முல்லைப் பூக்கள்
சிரிக்கின்றன.
என் நடுவீடுதனில்
வெள்ளெருக்குப் பூக்கிறது.

*     என் மனத்தோட்டத்து
சாமந்தி மெல்லவே
சிரிக்கிறது.

பச்சையம் தரும் பகலவன்
நஞ்சை உமிழும்
நாகரிகமும் நிகழ்கிறது.

*     என் கைரேகை தேய்ந்த
கதை கேட்க யாருமில்லை.
ஆனால் ,
ஆயுள் ரேகை பார்க்க
ஆவல் பிறக்கிறது.
ஏனெனில்
நான் அட்சய பாத்திரம்.

*     பாழாய்ப் போன
பஞ்சடைந்த கண்களுக்குப்
பாம்பின் படம்கூட
பசுமையாகத் தெரிகிறது.
சங்கடங்கள்
தொடரும் வாழ்வில்
பாகற்காய் இனிக்கிறது.

*     என்னைச் சுற்றிச் சுழலும்
வண்ண விளக்குகளின்
வாளிப்புகளின் நடுவில்
சின்ன குத்து விளக்கு
நானென்ன செய்ய முடியும்?

*     நீர் புரண்டு
படுக்குமிடமெல்லாம்
ஆற்றின் கரையோடு
மோதி விளையாடத்தான்
வேண்டியுள்ளது.
வழி வழியே ஓட வேண்டியது
நீரின் விதி.
நான் நீர்.

*     வண்டியில் பூட்டப்பட்ட
எருதுகளின்
கழுத்துச் சலங்கை போல
காலமெல்லாம்
புலம்ப வேண்டியதே
வாழ்க்கையென்றாகி விட்டது.

    வாழ்ந்து தொலைக்கப்பழகும்
போலித்தனங்களில்
ஒவ்வொரு நொடிகளும்
அரிதாரம் பூசும்.
கனவு கண்ட வாழ்க்கை
கண் முன்னே கரையும்,
ஒரு
மௌன விசும்பலில்.


மண்ணும், மனசும் 


பொறந்த மண்ணும்,சுத்தி இருந்த உறவும் ஒருகாலத்துல அன்னியமாகிப் போறதுல யாருக்கு வருத்தம் இருக்கோ இல்லியோ,எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.போலியான உறவுங்க கூட மனச லேசா காயப்படுத்துது. நாளைய வாழ்வு என்னன்னு தெரியல. இன்னய வாழ்க்கைக்குப் போட்டாபோட்டி.எத சம்பாதிச்சோம்னு நெனைக்கக்கூட நேரமில்ல.எது வேணுமின்னு,தேடவும் தெரியாத வாழ்க்கையா ஒரு வாழ்க்கை சிலருக்கு அமைஞ்சிப் போயிருக்கலாம்.யாசகம் எடுக்கிறவனுக்கு மட்டும் தன்னோட குறிக்கோள் தெரியுது.

காவேரிக்கரை 


காவேரிக்கரை: நான் பிறந்த மண்ணுக்குள்ள ஊறுன தண்ணி காவேரித்தண்ணி.அள்ளிக்குடிச்சா அருமையா இருக்கும்.தாகம் அடங்கிப்போகும்.இன்னிக்கி போர் தண்ணி நல்லா இல்ல.எல்லாம் மினரல் தண்ணியாப் போச்சு. வறண்டு போன காவேரித்தாயி எங்களப் பார்த்து சிரிக்கிறா.இது காலக்கொடுவினைன்னுதான் சொல்லனும்.