Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Tuesday, November 12, 2013

கவிதை

                                                              
                                           
                          ஊர்க்குருவிகள்
·         விதைக்கும் முன்னே
முளைக்கத்துடிக்கும் விதைகளுக்கு
வீரியம் அதிகம்தான்.
ஆனாலும்
சில முளைத்தும் பயனில்லை.

·         முட்டையிலிருந்து
பறவைகள் விடுபடுகிறபொழுதே
சில பறக்க எத்தனித்து
சிறகை ஒடித்துக்கொள்ளும்
சோகம் நிகழ்வதைக்
கவனிக்கத் தவறுகின்றன
ஆர்வ மிகுதியால்.

·         அரும்புகள் அழகுதான்,
கொடிகளின் நுனிகளில்
ஊஞ்சலாடும்வரை.
ஆனாலும்,
தலையில் சூடிக்கொள்ள
தயங்கும் மனம்.
பின் மலர்மாலையாவது
எப்படி?

·         மனம்
ஓடிவருகின்ற
ஆற்றுநீர் போல
அமைதிகொள்வதில்லை.
அது,
வானத்தில் வசீகரிக்கும்
வளைந்து கிடக்கும்
வானவில்லை
வளைக்க நினைக்கின்றன.

·         மண்ணுடனான
தொப்புள்கொடி உறவை
தனக்கு மட்டுமே
சொந்தம் எனக்கொண்டாடும்
சுயநலங்கள்
மண்ணுக்கு மேலே
மண்டிக்கிடக்கும்
மரங்களை
மனம் கொள்வதில்லை.

·         சூரியக் கிரணங்களைக்
கைகளால் மறைக்க
திறமை போதாமல்
அறிவை வளர்க்க
அவசரப்படும் உலகமே,
அப்பாவியாக
ஊர்க்கதைப்
பேசிப்பயனில்லையே !

·         வல்லூறுகளின் வலிமை
அதை ,வானத்தில்
பறக்க வைக்கின்றது.
ஊர்க்குருவிகள்
அண்ணாந்து
உயரே பார்க்காமல்
நரிகளென ஊளையிட்டு
ஊருறங்குகையில்
உள்ளங்கைகளைக்
கடிந்துகொள்கின்றன
உதவிக்கு வரவில்லையென்று.

·         அந்தியில்
வெளுத்த வானம்
ஒருபொழுதும்
வஞ்சித்ததில்லை
மக்கள் மனசு போல.
அது,
வானம்பாடிகளுக்கு
இறக்கைகளைக் கொடுத்தது
மேலே மேலே பறப்பதற்கு.
மனத்தைச் சுகமாக்கு
மேன்மேலும் உயர்வதற்கு.
வாழ்க்கை அழகியது.
அதை

அழுக்காக்காதே!

2 comments:

  1. அகத்தின் அக்கறை
    எழுத்தில் தெரியும்
    அன்பின் முகவரி
    கருத்தில் தெரியும்
    வாடிய உள்ளத்தை
    துள்ளி ஒடிட வைக்கும்.......
    எண்ணமும் எழுத்தும்
    சிந்தையில் நிலைக்கும்
    வணககமும் வாழ்த்தும்
    வாழ்க்கை சிறக்கும்
    நம்பிக்கை வார்த்தைகள் நாளும் கொடுக்கும்
    நல்ல நட்பே உன்னை என் இதயம் துதிக்கும்.

    ReplyDelete