·
அறிவியல்
உலகில் மனம்
அலைபாயும்
மனிதா ? –
மடமையில்
தோய்ந்தால்
அதை
விலக்குதல் எளிதா ?.
·
கண்ணுக்கு
எதிரே
கடலென
நூல்கள்
மனம்
புரட்டிட மறந்தால்
தொலைந்திடும்
வாழ்நாள்.
·
காற்றிலே
ஏறினாய்.
விண்ணையே
தாண்டினாய்.
கடலினுள்
மூழ்கியே
முத்தையே
ஏந்தினாய்.
·
அத்தனை
ஆற்றலும்
மொத்தமாய்
உன்னிடம்.
குத்தகை
எடுப்பதா ?
மடமைகள்
நெஞ்சிடம்.
·
பல்லியைக்
கண்டு நீ
புலி
எனப் பதறலாம்.
தன்னினம்
அழிவதைக்
காணாதிருக்கலாம்.
·
அச்சத்தில்
வாழ்பவன்
ஆசைக்கு
அடிமை.
ஆசையே
வாழ்வானால்
அதுதான்
கொடுமை.
·
மடமையே
மனிதனுக்கு
மாபெரும்
நஞ்சு.
அதை
நீக்கிட அடைந்திடும்
நிம்மதியை
நெஞ்சு .
·
பயில
வா ! பயில வா !
பாடம்
பல பயில வா.
நீக்க
வா ! போக்க வா !
மடமையை
நீக்க வா !
No comments:
Post a Comment